உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: ‘ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரு நாள் மாநாடு இன்று (மே.27) தொடங்கியது. மாநாட்டை, தமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு தொடங்கி வைத்தார். ஆளுநரின் செயலாளர் கிரிலோஸ் குமார் வரவேற்றார்.

மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாநாட்டின் முதல் நாளில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். எஸ்.வைத்தியசுப்ரமணியம் எழுதிய “நிறுவன மேம்பாட்டுத் திட்டம் – பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலம்” குறித்து ஐஐடி-காரக்பூர் முன்னாள் இயக்குநர், பேராசிரியர் பார்த்தா சக்ரபர்தி விளக்குகிறார்.

சிஸ்கோ இன்ஜினியரிங் தலைவர் ஸ்ருதி கண்ணன் “புதுமை மற்றும் தொழில்முனைவு” என்ற தலைப்பிலும்,. அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோம் சயின்ஸ் மற்றும் பெண்களுக்கான உயர்கல்வியின் துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர், “தேசிய கடன் கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல்” ஆகிய தலைப்புகளில் விளக்குகின்றனர்.

மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டின் போது “பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள்” பற்றிய விளக்கங்களை துணை வேந்தர்கள் வழங்குவார்கள். நெட் அல்லது யுஜிசி-சிஐஎஸ் ஆர் தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள்/அறிஞர்களின் அனுபவப் பகிர்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்