போக்குவரத்து கடன் சங்க உறுப்பினர்களுக்கு சிக்கன நிதி வட்டி 8 சதவீதம் வழங்க முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து கடன் சங்க உறுப்பினர்களுக்கு சிக்கன நிதிக்கான வட்டி 8 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. இங்கு உறுப்பினர்களின் சிக்கன நிதிக்கு 8 சதவீத வட்டிவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் செயலாளர் (பொறுப்பு) கு.உமாச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கடன் சங்க உறுப்பினர்களின் சேமிப்பு தொகையான சிக்கன நிதியின் (thrift deposit intrest) 2023-24-ம் ஆண்டுக்கான வட்டி 8 சதவீதம் கணக்கிட்டு வழங்க சொசைட்டி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சொசைட்டியில் கடன் பெற்று கடனுக்குரிய தொகையை செலுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மாதம் சொசைட்டி கடனுக்காக பிடித்தம் செய்ய வேண்டிய தொகையில் இருந்து சிக்கன நிதிக்கான வட்டியை கழித்து மீதமுள்ள தொகையை தவணை பிடிப்பு பட்டியலாக அனுப்பப்படும்.

கடனுக்குரிய பிடித்தம் தொகையைவிட சிக்கன நிதிக்கான வட்டித் தொகை கூடுதலாக இருப்பின்அவ்வாறான உறுப்பினர்களுக்கு சொசைட்டி பிடித்தத்தில் ரூ.750 மட்டுமேபிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள தொகைஅவரவர் வங்கிக் கணக்கில் ஜூன் 1-ம் தேதி செலுத்தப்படும்.

இவ்வாறு சிக்கன நிதிக்கான வட்டிஜூன் 1-ம் தேதி நடைமுறைப்படுத்தப்படும். மேலும் விவரங்களை அன்றைய தினம் முதல் சங்கத்தில் நேரில் வந்துபெற்றுக் கொள்ளலாம். வரக் கூடிய கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உறுப்பினர்களுடைய ஆதார் எண், ரேஷன் அட்டைஎண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆவணங்களோடு பணிவிவரத்தை சொசைட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்