5 விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டிகளை இணைத்து இயக்க பயணிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி என்னும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்தபெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங்வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில்80 இடங்களும், ஏசி பெட்டியில் தூங்கும் வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும். ஏற்கெனவே, பல்வேறு முக்கிய விரைவு ரயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன், மலைகோட்டை, முத்துநகர் உள்ளிட்ட விரைவு ரயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், ராமேசுவரம், திருச்செந்தூர், கொல்லம், மன்னை, குருவாயூர் ஆகிய 5 விரைவு ரயில்களில் இன்னும் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட வில்லை. இந்த ரயில்களில் எல்.எச்.பி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: விரைவு ரயில்களில் எல்.எச்.பி பெட்டிகளை இணைத்து இயக்குவது வரவேற்கத்தக்கது. இருப்பினும் முன்பதிவு இல்லாத பெட்டிகள், தூங்கும் வசதி கொண்டஇரண்டாம் வகுப்பு பெட்டிகளை குறைக்கக்கூடாது.

இதுதவிர, ராமேசுவரம், கொல்லம், திருச்செந்தூர் உள்ளிட்ட விரைவு ரயில்களிலும் எல்.எச்.பி பெட்டிகளை இணைத்து இயக்கினால், பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள்கூறுகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில், எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. புதிதாக எல்.எச்.பி பெட்டிகள் வர, வரபழைய பெட்டிகளை நீக்கிவிட்டு,எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள விரைவு ரயில்களிலும் படிப்படியாக இணைக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்