பொட்டலமிடப்பட்ட பொருட்களில் நியாயமற்ற அதிகபட்ச சில்லறை விலை: சட்டம் கொண்டுவர அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பு கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: பொட்டலமிடப்பட்ட பொருட்களில் நியாயமற்ற அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பதை தடுக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பு கோரியுள்ளது.

நாடு முழுவதும் நுகர்வோர் விழிப்புணர்வு , கல்வி, நுகர்வோர் குறைதீர்ப்புக்கான வழிகாட்டும் பணியில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில், அதிகபட்ச சில்லறை விலையை பொருட்கள் அடைக்கப்படும் பாக்கெட்களில் அச்சிடுவது தொடர்பாகவும், இதுகுறித்து அரசு முடிவுகள் எடுக்க வேண்டி வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்திடம் கடிதம் அளித்துள்ளது.

இதுகுறித்து, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் தென் பாரத அமைப்பு செயலாளர் எம்.என்.சுந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடைக்கப்பட்ட பொருட்களில் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடுவதற்கான சட்டம் மற்றும் ஒழுங்கு முறை ஆணையை கொண்டு வருவது தொடர்பாக நாடு தழுவிய இயக்கத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 1970-ம் ஆண்டு சட்ட அளவியல் சட்டத்தின் கீழ் அதிகபட்ச சில்லறை விலை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி சில்லறை விற்பனைக்கு வைக்கப்படும் பொருட்களின் பாக்கெட்களில் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் இந்த விலைக்கும் குறைவாக பொருட்களை விற்க முடியும். ஆனால், அதற்கு மேல் விலை வைத்து விற்பது குற்றம்.

ஆனால், அதிகபட்ச சில்லறை விலை என்பதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் சட்டம் உள்ளது. உற்பத்தியாளர் மனதில் தோன்றியதையே அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கின்றனர். மேலும், நுகர்வோருக்கும் அதிகபட்ச சில்லறை விலை கட்டமைப்பு பற்றிய போதிய அறிவும் இல்லை. உற்பத்தியின் தகுதிக்கு தொடர்பில்லாத விலையை நுகர்வோர் செலுத்தும் நிலை உள்ளது.

அதிகபட்ச சில்லறை விலை என்பது நியாயமானதாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். பொருளின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதில் அரசுக்கு எந்த ஒருபங்கும் இல்லை என்பதால், நியாயமற்ற விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக மருந்து தொடர்பான விஷயத்தில் நுகர்வோர் அதிகளவில் கொள்ளையடிக்கப்படுகின்றனர்.

எனவே, ஏறத்தாழ 140 கோடி நுகர்வோர் உள்ள நிலையில், தயாரிப்பு விலை, பொருளின் முதல் விற்பனை விலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அதிகபட்ச சில்லறை விலையை கட்டமைப்பது தொடர்பான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும், இதனை செயல்படுத்த காலம் ஆகலாம்.

அதுவரை, அதிகபட்ச சில்லறை விலையுடன், பொருளின் முதல் விற்பனை விலையையும் அச்சிட அரசு உத்தரவிடலாம். இதன் மூலம் நுகர்வோர் நியாயமான விலையை தேர்வு செய்து வாங்க முடியும். இதன் மூலம், உற்பத்தியாளர், இறக்குமதியாளருக்கும் செலவு அதிகரிக்காது.

இதுகுறித்து நுகர்வோர் விவகார அமைச்சகம், நிதியமைச்சகம் ஆய்வு செய்து நாடாளுமன்றத்தில் வைக்க வரைவு மசோதா தயாரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்