சென்னை: சிலந்தி ஆறு விவகாரம் தொடர்பாக நேற்று (மே., 23) கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், இன்று (மே., 24) அவர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், “இப்பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்ய மிகவும் தேவைப் படுவதால், இந்த விவரங்களை தமிழகத்துக்கு உடனடியாக அளிக்க வேண்டும்.
தமிழகம் - கேரளா ஆகிய இரு மாநிலங்கள் இடையிலான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தும் வகையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago