கோடை மின் தேவைக்கு 3,286 மில்லியன் யூனிட் கொள்முதல்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் போது மின்தேவையை சமாளிக்க, மின்வாரியம் 3,286 மில்லியன் யூனிட்மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்துள்ளது.

இந்த ஆண்டு கோடை வெப்பம் கடந்த மார்ச் மாதத்திலேயே தொடங்கியது. இதனால், வீடுகளில் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்தது. இதன்காரணமாக, தினசரி மின்தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது.

இம்மாதம் 2-ம் தேதிதினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், இந்த மின்தேவையை மின்வாரியம் எளிதாக சமாளித்தது.

உச்சம் தொட்ட மின்தேவை: இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை வெயிலின்போது தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20,830 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. மின்வாரியம் மின்தேவையை சமாளிக்க பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, சொந்த உற்பத்தி,மத்திய தொகுப்புகளில் இருந்துமின்சாரம் கொள்முதல் செய்ததோடு, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.

இதன்படி, குறைந்தகால ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,755 கோடிமதிப்பில் 3,286 மில்லியன் யூனிட்மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 24 மணிநேரத்துக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8.16-க்கும், ஏப்ரல் மாதம் ஒருயூனிட் ரூ.8.41-க்கும், மே மாதம் ஒரு யூனிட் ரூ.7.74 என்ற விலையில்வாங்கப்பட்டது. மேலும், கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையிலான மின்தேவையை (பீக் ஹவர்டிமாண்ட்) சமாளிக்க அதிகபட்சமாக ஒரு யூனிட் ரூ.9.99 வரை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தினசரி மின்தேவை கணிசமாக குறைந்துள்ளது. எனினும், குறைந்தபட்ச மின் தேவையை சமாளிக்க காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்