தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும்.

வரும் 24-ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22,23) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை 23 ஆம் தேதிக்குப் பின்னர் படிப்படியாகக் குறையும் என்றும் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.

வாடும் வட இந்தியா: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பரவலாக தென் மாநிலங்களில் மழை பெய்துவரும் சூழலில் வட மாநிலங்கள் தொடர்ந்து கடும் வெப்பத்தால் வாடுகிறது. டெல்லி, ராஜஸ்தானின் சில பகுதிகள், பஞ்சாப், ஹரியாணா,மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இப்பகுதிகளில் உயர்ந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 47 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகபட்சமாக ஹரியாணாவில் 47.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அடுத்தபடியாக டெல்லியின் நஜஃப்கர் பகுதியில் 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்