ராஜீவ் காந்தியுடன் உயிர் நீத்த 9 காவலர்களுக்கு அஞ்சலி: முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் பங்கேற்பு

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பலியானார். அப்போது அவரது பாதுகாப்புக்குச் சென்ற 9 காவலர்களும் உயிரிழந்தனர். அந்தக் காவலர்களுக்கு முன்னாள் டிஜிபி தேவாரம் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட 9 காவலர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். உயிரிழந்த காவலர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் காஞ்சிபுரம் மாவ்ட காவல் துறை சார்பில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.அந்த வகையில் 33-வது ஆண்டு நினைவு நாள் இன்று (மே 21 ) அனுசரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் ஏராளமான காவலர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி தேவாரம் பங்கேற்று உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE