மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. மேலும், இடத்துக்கு இடம் கட்டணமும் வேறுபடுகிறது என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, விமான நிலையம் – சின்னமலை, பரங்கிமலை - நேரு பூங்கா வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, வீடுகளில் இருந்து, தங்களது இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக ஆலந்தூர், மீனம்பாக்கம், பரங்கிமலை, கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் உட்பட அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத்தும் இடவசதி இருக்கிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணமாக முதல் 0 - 6 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.10, காருக்கு ரூ.20, 6 – 12 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.15, காருக்கு ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.20, காருக்கு ரூ.40, காலை 6 – இரவு 10 மணி வரையில் இருசக்கர வாகனத்துக்கு ரூ.50, காருக்கு ரூ. 100 என வசூலிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.250 எனவும், காருக்கு ரூ.500 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், விமான நிலையம், கிண்டி, செஷனாய் நகர், பரங்கிமலை, வடபழனி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த கட்டண முறை வேறுபடுகிறது.
விமான நிலையம்
விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 நிமிடம் - 2 மணி வரை இருசக்கர வாகனத்துக்கு ரூ.15, காருக்கு ரூ.75, 2 – 7 மணி நேரம் வரை இருசக்கர வாகனத்துக்கு ரூ.15 + 10 (ஒரு மணி நேரத்துக்கு கூடுதல் தொகை), காருக்கு ரூ.75+10 (ஒரு மணிநேரத்துக்கு கூடுதல் தொகை), 7 – 24 மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.100, காருக்கு ரூ.350, 24 மணி நேரத்துக்கு மேல், ஒரு இரவு நிறுத்த கட்டணம் இருசக்கர வாகனத்துக்கு ரூ.200, காருக்கு ரூ.700, மாதாந்திர அனுமதி அட்டை கட்டணம் இருசக்கர வாகனத்துக்கு ரூ.500, காருக்கான கட்டணம் ரூ.3,500 என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
கிண்டி, ஷெனாய்நகர், மவுன்ட்
கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் 6 மணி நேரம் வரை இருசக்கர வாகனத்துக்கு ரூ.10, காருக்கு ரூ.20, 6 – 12 மணி நேரம் வரை இருசக்கர வாகனத்துக்கு ரூ.10, காருக்கு ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.20, காருக்கு ரூ.40, ஒரு இரவு நிறுத்த இருக்கர வாகனத்துக்கு ரூ.50, காருக்கு ரூ.100, மாதாந்திர அட்டையில் இருசக்கர வாகனத்துக்கு ரூ.250, காருக்கு ரூ.500 என வசூலிக்கப்படுகிறது.
வடபழனி - டூவீலர் கட்டணம்
வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் 6 மணி நேரம் வரை இருசக்கர வாகனத்துக்கு ரூ.20, 6 - 12 மணி நேரத்துக்கு ரூ.40, 12 மணி நேரத்துக்கு மேல் சென்றால் ரூ.60, மாதாந்திர அனுமதி அட்டை கட்டணம் ரூ.700 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில், மாநகர பஸ் போன்ற போக்குவரத்தை ஒப்பிடுகையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இதற்கிடையே, மற்றொரு புறம் வாகன நிறுத்தக் கட்டணமும் அதிகமாக இருப்பதால், கூடுதல் கட்டண சுமையாக இருக்கிறது என வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்யவே மெட்ரோ ரயிலுக்கு மக்கள் ஆர்வமாக வருகின்றனர். ஆனால், மின்சார ரயிலை ஒப்பிடுகையில் கட்டணம் அதிகமாக இருப்பதால், மக்கள் இன்னும் அதிக அளவில் பயணம் செய்ய முன்வரவில்லை.
மற்றொரு புறம் வாகன நிறுத்துவதற்கான கட்டணங்களும் அதிகமாக இருக்கின்றன. இதனால், மெட்ரோ ரயிலில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்ய இதுவும் ஒரு தடையாக இருக்கிறது. மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டுமெனக் கூறும் அரசு, மெட்ரோ ரயில் கட்டணம் அல்லது வாகன நிறுத்த கட்டணத்தையாவது குறைக்க முன்வர வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago