12 மணி நேர வேலை குறித்து சிஐடியு புகார்: மாநகர போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகரப் பேருந்துகளில் 12 மணி நேர வேலை வழங்கப்படுவதாக சிஐடியு அளித்த புகாரை தொடர்ந்து பணிமனைகளில் தொழிலாளர் துறை ஆய்வு மேற்கொண்டது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் 8 மணி நேரம்,16 மணி நேரம் முறையில் பணிபுரிகின்றனர். 8 மணி நேர பணிக்கு ஒரு வருகை பதிவும், 16 மணி நேர பணிக்கு 2 வருகை பதிவும் வழங்கப்படுகிறது.

4 ஆண்டுகளுக்குப் பின்: இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றி ஒரு வருகை பதிவுடன் ரூ.500 ஊதியமும் அளிக்கப்பட்டது. அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) எதிர்ப்பை அடுத்து இந்த முறை கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 12 மணி நேரம் வேலை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 140-க்கும் மேற்பட்ட பேருந்து வழித் தடங்களில் 12 மணி நேர வேலை வழங்கப்படுகிறது.

இது மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக இருப்பதால் இந்த நடைமுறையை கைவிட வேண்டும் எனசிஐடியு சார்பில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது. இதில் நடவடிக்கை இல்லாத நிலையில், சரக வாரியாக தொழிலாளர் ஆய்வாளர்களிடம் சிஐடியு நிர்வாகிகள் புகாரளித்தனர்.

இதையடுத்து, அண்மையில் பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட பணிமனைகளில் தொழிலாளர் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் கருத்து களையும் கேட்டறிந்துள்ளார். தொடர்ந்து, பல்வேறு பணிமனைகளிலும் ஆய்வு நடத்தி, விரைவில் சிஐடியு அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தொழிலாளர் உடல் நலன் - இது தொடர்பாக சிஐடியு நிர்வாகிகள் கூறும்போது, ‘‘12 மணி நேர வேலை என்னும் மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் நடவடிக்கை, சட்டப்படி தவறானதாகும். தொழிலாளர்களின் உடல் நலன், இயற்கை நியதிக்கும் எதிரானதாகும். சர்வதேச அளவில் ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலையும், 8 மணி நேரம் ஓய்வும், 8 மணி நேரம் உறக்கமும் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

எனவே, 12 மணி நேர வேலை முறையைக் கைவிட வேண்டும். தொழிலாளர் ஆய்வாளரின் ஆய்வின் மூலம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் 1961 அத்தியாயம் - 5 மீறப்பட்டது உறுதியாகும். அதன்படி, நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்