காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு எவ்வாறு மதிப்பளிக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் ஆவணங்களைப் பாதுகாத்தல், திட்ட மேலாண்மை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்று அரசுத்துறை பயிற்சி முகாம் தலைப்புகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர், பல்வேறு துறை செயலர்கள், செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நிதியை வேகமாக செலவிடுவதால் பல மாநிலங்கள் கூடுதலாக நிதியை மத்திய அரசிடம் பெறுகின்றன. இதனால் புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கு நிதி மற்றும் திட்ட மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்
மேலும், காவிரி மேலாண்மை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த கிரண்பேடி , ‘’காவிரி மேலாண்மை விவகாரத்துக்காக புதுச்சேரியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றாலும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு எவ்வாறு மதிப்பளிக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago