“பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: “இந்தியாவில் பல்முனை தாக்குதல் இருந்தபோதும், அதையெல்லாம் தாண்டி சனாதன தர்மம் நிலைத்து நிற்கிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக் கழகத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்து 2500 ஆண்டுகள் நிறவடைவதையொட்டி, ஆதிசங்கரபகவத்பாதர்கள் அருளிச்செய்த கிரந்தங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை இந்தப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மற்றும் இந்திய கலாச்சாரத்துறை நடத்தியது.

சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பேசியது: “ஆதிசங்கரர் காட்டிய வழி இந்திய காலச்சாரத்தை பாதுகாக்க மிகவும் முக்கியமானதாக உள்ளது. சனாதன தர்மம் என்பது நமது பாரதத்தின் ஒழுக்க நெறி கொண்ட வாழ்வியல் முறையை குறிப்பது.

சனாதன தர்மத்தின் மீது ஆங்கிலேயேர் காலம் முதல்கொண்டு பலமுனை தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி நிற்கிறது. நமது பாரதம் தற்போது வளர்ச்சி பெற்ற பாரதமாக மாறி வருகிறது. ஆதிசங்கரர் போன்றோர் காட்டிய வழியில் நாமும் முன்னேறுவோம்” என்றார்.

சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், “ஆதிசங்கரர் விழா இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. ஏன் இந்தியாவை தாண்டி நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் கூட நடத்துகின்றனர். ஆதிசங்கரர் அருளியை அத்வைத கருத்துகள் மதங்களை கடந்து முக்கியமானது. வேதங்களின் பொருள்தான் அத்வைதம். அமைதி, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்துவதுதான் அத்வைதம்” என்றார்.

இந்த விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ஸ்ரீநிவாசு வரவேற்றார். கவுரவ விருந்தினர்களாக சென்னை ஐ.ஐ.டி.தலைவர் வி.காமகோடி, பேராசிரியர் கிண்டி எஸ்.மூர்த்தி, தேசிய ஒருங்கிணைப்பாளர் என்.வீழிநாதன், பல்கலைக் கழக வேந்தர் வி.குடும்பசாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்