கடல் சீற்றம் காரணமாக மூடப்பட்டிருந்த தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் குவிந்தனர்.
இந்திய கடற்பகுதியில் இருந்து 10 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் மிக பலம்வாய்ந்த அலைகள் கடந்த 18-ம் தேதி உருவானது, இந்த அலைகள் இந்திய கடற்பகுதியை கடந்து சென்றதால் அரபிக் கடல், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடற்பகுதிகளில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கடல் சீற்றங்கள் உருவாகின.
குறிப்பாக தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்.21, 22 ஆகிய நாட்களில் ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோரத்தில் ராட்சத கடல் அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடுவதை தவிர்க்க கடந்த 21-ம் தேதியிலிருந்து தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய கடல் சார் தகவல் மையம் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் எச்சரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பிறகு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்பகுதிகளில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வந்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago