சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் பட்டாசு உற்பத்தி செய்த ஆலைக்கு சீல்

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த ஆலைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன் என்பவர் மாரனேரி பகுதியில் பெப்சி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் கடந்த மார்ச் 1ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, விதிமீறி பட்டாசு உற்பத்தி செய்தததால், உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வட்டாட்சியர் வடிவேல் தலைமையிலான அதிகாரிகள் ஆலையில் ஆய்வு செய்த போது, 50 தொழிலாளர்களை கொண்டு சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்து கொண்டிருந்ததால், பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE