சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனல் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர்கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது சென்னை போலீஸாரும் அடுத்தடுத்து 7 வழக்குகளைப் பதிந்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிந்தனர். இந்தவழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள அவரது வீடு, தி.நகரில் உள்ள அவரதுஅலுவலகத்திலும் சோதனைநடைபெற்றது. இதற்கிடையே, சவுக்கு சங்கர் கைதைத் தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் திருச்சி போலீஸாரால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
ஆவணங்கள் தேடும் பணி: இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய நிலையில் அது தொடர்பான ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்பட மேலும் சிலவற்றை ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் தேடும் பணி நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago