சென்னை: மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுபவர், பணம் படைத்தவர். இந்த தேர்தலைப் பொறுத்தவரை, ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நமது வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். இந்தியாவில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர்.
அவர்களிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. திமுக வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மேலும், சொத்துக்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் அவர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள்.” என்று பேசியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டிருந்த தயாநிதி மாறன், "தனது பேச்சுக்கு 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்" என்று எச்சரித்திருந்தார். அதன்படி மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சக்திவேல் அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago