சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி பிரம்மோற்சவம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: பல ஆண்டுகளுக்குப்பிறகு சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவ தால் யாருக்கு என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால் இங்கு இம்மாதம் திட்டமிட்டபடி பிரம்மோற்சவம் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்தக்கோரியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர் மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது.

அப்போது பிரம்மோற்சவம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனுதாரர் தரப்பில், ‘‘10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதிக்கு கடைசியாக 1849-ம் ஆண்டு பிரம் மோற்சவம் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு சைவ மற்றும் வைணவ மோதல்கள் காரணமாகவும், தீட்சிதர்களின் எதிர்ப்பு காரணமாகவும் பிரம்மோற்சவம் நடத்தப் படவில்லை, என வாதிடப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுதாரர்கள் தரப்பில், ‘‘ கடந்த 1920-ம் ஆண்டு நுழைவாயில்களை திறப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவில் பிரம்மோற்சவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் பிரம்மோற்சவம் நடத்த முடியாது பிரம்மோற்சவம் நடத்துவது என்பது மரபு விழாவா என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. இதுவரை இல்லாத புதிய நடைமுறையை கொண்டு வர அரசுக்கு அதிகாரமில்லை” என வாதிடப்பட்டது.

பதிலுக்கு அறநிலையத் துறை தரப் பில், ‘‘ கடந்த பல ஆண்டுகளாக நடைபெறாத பிரம்மோற்சவத்தை நடத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. உரிமையியல் நீதிமன்றம் பிரம்மோற்சவம் நடத்தக்கூடாது என எந்த தடையும் விதிக்கவில்லை. கோவிந்த ராஜப் பெருமாள் கோயில் அறங் காவலர்கள் பிரம்மோற்சவத்தை நடத்தக் கோரியுள்ளனர். அதன்படி இம்மாதம் பிரம்மோற் சவத்தை விமரிசையாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது, என தெரிவிக்கப்பட்டது.

அப்போது தீட்சிதர்கள் தரப்பில், “பிரம்மோற்சவம் மரபு விழாவாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் இதனால் நடராஜர் சந்நிதியில் நடைபெறும். 6 கால பூஜைகளுக்கும், பக்தர்களின் வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படும், என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக் கிட்ட நீதிபதிகள், பல ஆண்டுகளுக்குப்பிறகு சிதம்பரம் தில்லை கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்து வதால் யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த விவகாரத்தில் மரபு மற்றும் சட்ட விதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி விசாரணையை வரும் ஜூன் 24-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்