காஞ்சிபுரம்: "எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும்." என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடும். அதன்பின் அதிமுக செங்கோட்டையின் தலைமையில் அல்லது வேலுமணி தலைமையில் செல்லுமா என்பது தெரியவரும்" என்று தெரிவித்தார்.
அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு பதில் அளித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும்.
ஆனால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கும் கருத்து கண்டிக்க கூடியது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வன்னெடும். இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன்னால் சிந்தித்து செயல்படுவது தான் அவரை போன்ற அரசியல்வாதிக்கு ஏதுவாக அமையும்.
» வருடாந்திர பராமரிப்பு பணி: கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
» “எவ்வளவு காலம் தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது?” - செல்வப்பெருந்தகை ஆதங்கம்
என்னைப் பொறுத்தவரை மாற்றுகட்சியினர் குறைசொல்ல முடியாத அளவுக்கு 45 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தில் நேர் வழியில் சென்றுள்ளேன். அதிமுகவுக்கு என்றைக்கு சோதனை வந்தாலும் தூணாக நின்று செயல்பட்டுள்ளேன்." என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago