சென்னை: நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என பத்திரிகை வாயிலாக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அப்போதே கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தனர். மேலும், கட்சியில் புதிய உறுப்பினர்களை ஆன்லைன் செயலி மூலம் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், புதிய கட்சி தொடங்கப்பட்டால், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பட்டியலை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பாக பத்திரிக்கையில் தேர்தல் ஆணையம் வெளியிடும். அதில் ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
» நலத்திட்ட தகவல்களை பெற்றோருக்கு பகிர வாட்ஸ்-அப் தளம்: பள்ளிக்கல்வி துறை புதிய முயற்சி
» தமிழகம் முழுவதும் 8.16 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு
அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி பெயர் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் பத்திரிக்கையில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பொதுமக்களுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அலுவலகம், மனை எண் 275, சீஷோர் டவுன், 8-வது அவென்யூ, பனையூர், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை 600119-ல் அமைந்துள்ளது.
இந்த கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29ஏ-ன் கீழ் விண்ணப்பித்துள்ளது.
கட்சியின் நிர்வாகிகளாக, தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்து என்ற முனுசாமி, பொருளாளர் வெங்கடராமணன், துணை நிலைய செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளர் தாஹிரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதற்கு யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின், அவர்கள் தங்களுடைய ஆட்சேபனையை அதற்குரிய காரணங்களோடு, செயலர் (அரசியல் கட்சி), இந்திய தேர்தல் ஆணையம், நிர்வாச்சன் சதன், அசோகா சாலை, டெல்லி - 110001 என்ற முகவரிக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago