சென்னை: சர்வதேச அன்னையர் தினம் மே மாதத்தின் 2-வது ஞாயிறான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: அன்னையர் நமது மிகப்பெரிய பலம் மற்றும் உத்வேகம். அவர்கள் நம்மை வளர்த்தெடுத்து, வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத வகையில் நம் வாழ்வை வடிவமைக்கின்றனர். நம் வாழ்வின் பேரன்பு மற்றும் நெகிழ்ச்சிமிக்க அற்புதமான அந்த தூண்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா. தூய்மையான அன்பை மாரியென பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். ஈன்றவள் நம்மை சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரை போற்றுவோம்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அதிமுகவுக்கு பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா நினைவுதான் வருகிறது. அன்பின் வடிவமான அன்னையர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தாயின் அன்பு அளப்பரியது. ‘தன்னலமற்றது தாயின் நெஞ்சம்’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, தியாகங்களின் மொத்த உருவமாக திகழும் அன்னையருக்கு எனது நல்வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம், தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி. மனித வாழ்வின் அனைத்துக்கும் ஆதாரமாக திகழும் அன்னையர்களுக்கு வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: குடும்பம், குழந்தைகளுக்காக ஒவ்வொரு நாளும் ஓயாமல் உழைத்து, அனைவரையும் இணைக்கும் மைய புள்ளியாக திகழும் தாய்மார்களின் கடின உழைப்பும், தியாகங்களும் போற்றுதலுக்கு உரியது. நம் அனைவரின் வாழ்விலும் தாய்மார்கள் வகிக்கும் முக்கிய பங்குக்கு நன்றி செலுத்துவோம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நாம் பிறந்த நாட்டை ‘தாய்நாடு’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறோம். அன்னையை தெய்வமாக போற்றுகிறோம். ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் முன்னேற அன்னையின் அரவணைப்பே முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்: அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள். இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை போற்றி வணங்குவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி, சரத்குமார், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago