மாநகர பேருந்துகளில் 12 மணி நேர வேலை: சிஐடியு புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் வி.தயானந்தம், எம்டிசி பணிமனைகள் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் தொழிலாளர் ஆய்வாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்கள் 8 மணி நேரம்,16 மணி நேரம் முறையில் பணிபுரிகின்றனர். 8 மணி நேர பணிக்கு ஒருவருகை பதிவும், 16 மணி நேரபணிக்கு இரு வருகை பதிவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றி ஒரு வருகை பதிவுடன் ரூ.500 ஊதியமும் அளிக்கப்பட்டது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின்எதிர்ப்பையடுத்து இந்த முறை கைவிடப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 12 மணி நேரம்வேலை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறானதாகும். எனவே, 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்