சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரைஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதி கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்ஒருசில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 13-ம் தேதிவரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
12-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பநிலை இருக்கக் கூடும்.
» மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண்: விருதை பிரேமலதா பெற்றுக் கொண்டார்
» “பட்டாசு ஆலை விபத்துக்கு பேராசை தான் காரணம்” - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
கோடை மழையால் குறைந்த வெப்பநிலை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில்பல்வேறு நகரங்களில் வெப்பநிலை குறைந்திருப்பதுடன், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவான இடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. அதன்படி, நேற்று மாலை 5.30 மணிக்கு பதிவானவெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 107 டிகிரி, ஈரோட்டில் 106 , திருச்சி, நாமக்கல், மதுரைவிமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 103 , சேலத்தில் 102, கோவை, மதுரை மாநகரம், பாளையங்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 101, திருத்தணி மற்றும் வேலூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago