தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 சிசிடிவி கேமராக்கள் பழுது

By செய்திப்பிரிவு

சென்னை: தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 சிசிடிவி கேமராக்கள் நேற்று பழுதாகின. தென் சென்னை மக்களவை தொகுதியில் சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் 10 லட்சம் ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 21 ஆயிரம் பெண்வாக்காளர்கள், 464 திருநங்கையர் என மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 10 லட்சத்து 96 ஆயிரம் பேர் (54.17 சதவீதம்) வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் 4 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டு, 210 சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த வேட்பாளர்களின் முகவர்களும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பாதுகாப்பு அறைக்கு வெளிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 2 சிசிடிவி கேமராக்கள் பழுதாகின. இதற்கு வேட்பாளர்களின் முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 2 சிசிடிவி கேமராக்கள் பழுதாகின. அது எங்கள் கவனத்துக்கு வந்தவுடன் பழுது நீக்கப்பட்டது. பாதுகாப்பு அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள எந்த கேமராக்களும் பழுதாகவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்