ரூ.7.50 கோடியில் 30 தீயணைப்பு வண்டிகள்

நடப்பாண்டில் ரூ.7.50 கோடி செலவில் 30 தீயணைப்பு வாகனங் கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதன் கிழமை நடந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்:

தீயணைப்புத் துறையில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய 65 தீயணைப்பு வாகனங்கள் மாற்றப்பட்டு, புதிய வாகனங்கள் படிப்படியாக வழங்கப்படும். முதல்கட்டமாக நடப்பு நிதியாண் டில் ரூ.7.50 கோடி செலவில் 30 வானகங்கள் வழங்கப்படும்.

ரசாயன தொழிற்சாலை மற்றும் அனல்மின் நிலை யங்களில் ஏற்படும் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் நுரை கலவை பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் படிப்படியாக கொண்டுவரப்படும். இந்த நிதியாண்டில் ரூ.1.25 கோடியில் 5 வாகனங்கள் வழங்கப்படும்.

அரக்கோணம் தீயணைப்பு நிலையத்தில் ரூ.2.68 கோடியில் ஒரு அலுவலர் மற்றும் 16 பணி யாளர் குடியிருப்புகளும் சென்னை தங்கசாலையில் ரூ.1.63 கோடி செலவில் தீயணைப் போருக்கான 6 குடியிருப்புகள், வண்ணாரப்பேட்டை நிலைய வளாகத்தில் அலுவலர் களுக்கான 3 குடியிருப்புகள் கட்டப்படும்.

சென்னையில் பணியாற்றும் மாவட்ட அலுவலர் மற்றும் உயர் அலுவலர்களுக்கான 2 குடியிருப்புகளும் பிற நகரங் களில் இருந்து அலுவல் பணியாக சென்னை வரும் இணை மற்றும் துணை இயக்குநர்கள், மாவட்ட அலுவலர்கள் தங்குவதற்கான விடுதியும் மயிலாப்பூரில் ரூ.1.25 கோடி செலவில் கட்டப்படும்.

கீரமங்கலம், அலங்காநல்லூர், அவினாசி, அன்னூர், சென்னி மலை, செய்யூர், திருமருகல், ஆகிய 7 இடங்களில் ரூ.6.30 கோடி செலவில் புதிய தீயணைப்பு நிலையங்கள் உருவாக்கப் படும். காங்கேயம், வெள்ளக் கோவில் தீயணைப்பு நிலைய ங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டித் தரப்படும். 5 மண்டல அலுவலகங்கள், 34 கோட்ட அலுவலகங்கள், மாநிலப் பயிற்சி மையம், மாநில பட்டறை, தீக்கட்டுப்பாட்டு அறை ஆகிய வற்றின் செயல்பாட்டுக்கு இணையதள வசதி வழங்கப்படும்.

தீயணைப்பு பணியாளர்களின் சீருடை தையல் கட்டணம் ரூ.250-லிருந்து ரூ.450 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.28 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE