சென்னை: நடிகர் கார்த்தி, நலன் குமரசாமி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதில் எம்.ஜி.ஆர் ரசிகராக, ராஜ்கிரண் நடிக்கிறார். அவர் பேரனாக கார்த்தி நடிக்கிறார். அவரும் எம்.ஜி.ஆர், ரசிகராகவே வருகிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதற்கு ‘வா வாத்தியாரே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் சிலம்பு சண்டைக் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இதற்காக நடிகர் கார்த்தி, பாண்டியன் மாஸ்டரிடம் கடந்த சில நாட்களாக சிலம்பம் கற்று வருகிறார்.
“கார்த்தி, ஏற்கெனவே சிலம்பம் கற்றிருந்தாலும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரை போல அடவு வைத்து ஆக்ஷனில் இறங்குகிறார். அதற்காக அவர் மீண்டும் சிலம்பம் கற்று வருகிறார்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago