சென்னை குடிநீர் வாரியத்தின் 100, 101-வது வார்டு பணிமனைகள் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்தின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 100 மற்றும் 101-வது வார்டு பணிமனை அலுவலகங்கள் 10-ம் தேதி முதல் புதிய முகவரியில் இயங்க உள்ளன. அதன்படி, கீழ்ப்பாக்கம் பிரான்சன் கார்டனில் இயங்கிவந்த 100-வது பணிமனை, கதவு எண். 4, கோவில் தெரு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், கதவு எண்.4, கோவில் தெரு, கீழ்ப்பாக்கம் என்றமுகவரியில் இயங்கிவந்த 101-வதுவார்டு பணிமனை, புதிய ஆவடி சாலையில், கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரில் மாற்றப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் குடிநீர்மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள் மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்த மேற்கண்ட புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பகுதி பொறியாளர் (8144930908), துணை பகுதிப் பொறியாளர்கள் (8144930222, 8144930223) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்