வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை!

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலான மழை பதிவானது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. அதிகபட்சமாக ஒடுக்கத்தூரில் 12 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

வேலூர் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்தாண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது. மே 1-ம் தேதிக்கு பிறகு அதிகபட்சமாக 110 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி வந்தது. இதனால், பகல் நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த சனிக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அவ்வப்போது பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், இரவு 11 மணிக்கு பிறகு அணைக்கட்டு மற்றும் ஒடுக்கத்தூர் சுற்று வட்டாரங்களில் பலத்தஇடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.

மழையானது அடுத்த சில மணி நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவின. ஒடுக்கத்தூர் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக ஒடுக்கத்தூர் பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது.

ஒரு சில இடங்களில் நேற்று காலை 8.30 மணி வரை மழை தொடர்ந்தது. இதன் காரணமாக வழக்கத்துக்கு மாறாக நேற்று காலை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நிலவி வந்த வெப்ப தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி குடியாத்தம் 37.4., மேல் ஆலத்தூர் 70.2, மோர்தானா அணை பகுதி 25, ராஜா தோப்பு அணை பகுதி 13, வடவிரிஞ்சிபுரம் 28.4, காட்பாடி 37.2, பேரணாம்பட்டு 42.4, வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகம் 38, வேலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் 42.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 453.8 மி.மீ., மழையும், சராசரி அளவாக 37.82 மி.மீ., மழையும் பதிவாகி இருந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் - இடி, மின்னலுடன் கனமழை: நாட்றாம்பள்ளியில் அதிகபட்ச மழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்ததால் குளிர் காற்று வீசியது. கோடை வெப்பதால் கடந்த ஒன்றரை மாதங்களாக பரிதவித்து வந்த பொதுமக்களும், விவசாயிகளும் கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் அளவு 100 டிகிரியை கடந்து கொளுத்தி வந்தது. அதிகபட்சமாக திருப்பத் தூர் மாவட்டத்தில் 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

மாவட்டத்தைச் சுற்றிலும் மலை பிரதேசங்கள் இருந்தும் வெயில் தாக்கம் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. நேற்று முன்தினம் கூட 107 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. வெயில் தாக்கம் தாங்க முடியாத மக்கள் கோடை மழை பெய்யாதா? என எதிர்பார்த்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு குளிர்ந்த காற்று வீசியது. இரவு 9 மணிக்கு மேல் நாட்றாம்பள்ளி, கேத்தாண்டப் பட்டி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோல, நேற்று அதிகாலை 5 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணி யம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆம்பூர் அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடி, மின்னலுடன் மழை பெய்ததால் வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோடை வெயில் தாக்கத்தால் கடந்த ஒன்றரை மாதங்களாக பரிதவித்து வந்த திருப்பத்தூர் மாவட்ட மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர். விவசாயிகளும் கோடை மழையால் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை 8 மணி நில வரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் வருமாறு: திருப்பத்தூர் 2.20 மி.மீ., கேத்தாண்டப்பட்டி 19, அதிகபட்சமாக நாட்றாம் பள்ளியில் 43, ஆம்பூர் 6.4 என மாவட்டம் முழுவதும் 78.90 மி.மீ., மழையளவு பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்