சென்னை: மெட்ரோ ரயில் சுரங்க நிலையங்களில் மொபைல்போன் சிக்னல் அடிக்கடி தடைபடுவதால், பயணிகள் வாட்ஸ்அப் போன்ற ஆன்லைனில் டிக்கெட் பெறுவதில் சிரமப்படுகின்றனர். சென்னையில் மெட்ரோ ரயில் வசதியாக இருப்பதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. டிக்கெட் கவுன்ட்டர்களில் நெரிசலை தவிர்க்க இணையதளம் வசதியுடன், மொபைல்போன் செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது, டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வசதியாக இருக்கிறது. இருப்பினும், சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மொபைல்போன் சிக்னல் அடிக்கடி தடைப்படுவதால், ஆன்லைனில் உடனடியாக டிக்கெட் எடுக்க முடியவில்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் பயணிகள் சிலர் கூறியதாவது: சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று, வர மெட்ரோ ரயில் மிகவும் பயன்உள்ளதாக இருக்கிறது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்லும் போதெல்லாம், மொபைல் போன் சிக்னல் தடைப்பட்டு, நெட்வொர்க் பிரச்சினை ஏற்படுகிறது. போனில் வரும் அவசர அழைப்புகளையும் ஏற்று பேச முடியாத நிலை ஏற்படுகிறது.
தற்போது, மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் வசதி இருக்கிறது. இதேபோல, காகித பயன்பாட்டை குறைக்க, கவுன்ட்டர்களில் வாட்ஸ்அப் வாயிலாக டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நெட்வொர்க் பிரச்சினை இருப்பதால், இந்த வசதிகளை சில நேரங்களில் பயணியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago