சமூக வளர்ச்சிக்கு வித்திடும் பெரு நிறுவனங்களை குறை கூற கூடாது: தமிழக பாஜக

By செய்திப்பிரிவு

சென்னை: சமூக முன்னேற்றத்துக்கு தூணாக விளங்கும் பெரு நிறுவனங்களை எதிர்க்கட்சிகள் குறைசொல்லக் கூடாது என பாஜக வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2022 - 23-ம் ஆண்டு ரூ.15,524 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகம். 2014-ம் ஆண்டு முதல் கடந்த 2023-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் ரூ.1,05,904 கோடி பொதுத்துறை நிறுவனங்களால் சமூக பொறுப்பு நிதி செலவிடப்பட்டுள்ளது.

ரூ.500 கோடிக்கும் அதிக நிகர மதிப்புள்ள நிறுவனங்கள் அல்லது ரூ.1000 கோடிக்கும் அதிக வருவாய் உள்ள நிறுவனங்கள் அல்லது ரூ.5 கோடிக்கும் அதிக நிகர லாபமீட்டும் நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் இருந்து 2 சதவீதம் நிதியை சமூக முன்னேற்றத்துக்கு செலவிட வேண்டும் என்ற பொறுப்புணர்வு சட்டம் கடந்த 2014 முதல், அதாவது பாஜக ஆட்சியமைத்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பெரு நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பை தருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு சமூக பொறுப்புணர்வு நிதி அளித்த நிறுவனங்கள் 884. கடந்த ஆண்டு வரை இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1,296 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முன்னேற்றத்தில், மக்கள் நலனில், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

மேலும் இந்த நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்ய மற்றும் விளையாட்டு, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியை எட்டுவதற்கு மிகச் சிறந்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. நரேந்திர மோடியின் பல்வேறு சாதனைகளில் சமூக பொறுப்புணர்வு நிதி அடித்தட்டு மக்களுக்கு சென்றடையச் செய்த சாதனையும் ஈடு இணையில்லாதது.

இனியாவது, வேலை வாய்ப்பு, கட்டமைப்பு மற்றும் சமூக முன்னேற்றத்துக்குத் தூணாக விளங்கும் பெரு நிறுவனங்களை குறை சொல்வதை விட்டுவிட்டு, அவர்களின் பங்களிப்பை பாராட்ட எதிர்க்கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் முன்வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்