ஏலச்சீட்டு நடத்தி மோசடி - நடிகர் விஜய் கட்சி நிர்வாகியின் வீடு முற்றுகை @ ஆரணி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பணம் கொடுக்காததைக் கண்டித்து நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகியின் வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் பள்ளிகூடத் தெருவில் வசிப்பவர் முருகன் (38). நடிகர் விஜய் தொடங்கிய தமிழர் வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக உள்ளார். இவரது வீட்டை பெண்கள் உள்ளிட் டோர் நேற்று முற்றுகையிட்டு, பூட்டு போட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஏலச் சீட்டு நடத்தி வந்தார் முருகன். நடிகர் விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவரிடம், ஆரணி மற்றும் சுற்றுப் புற பகுதியில் வசிப்பவர்கள் பணம் செலுத்தி வந்துள்ளனர். ஏலச்சீட்டு கால அவகாசம் முடிந்த பிறகும் பலருக்கு பல லட்சம் ரூபாய் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இது குறித்து ஆரணி நகர காவல் நிலையம் மற்றும் பொருளாதார குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் ஏலச்சீட்டு பணம் கொடுக்கவில்லை” என்றனர்.

இது குறித்து தகவலறிந்த ஆரணி நகர காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பின்னர், பூட்டு அகற்றப் பட்டு, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்