பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: முதலிடத்தில் திருப்பூர், கடைசி இடத்தில் திருவண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாகவும் பதிவாகியுள்ளது.

முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்: 1. திருப்பூர் (97.45%), 2. சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), 3. அரியலூர் (97.25%), 4. கோவை (96.97%) 5.விருதுநகர் (96.64%) ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை சிவகங்கை, ஈரோடு என 2 மாவட்டங்கள் பிடித்துள்ளன.

மாநிலத்திலேயே மிகக் குறைவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 87.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். புதுச்சேரியில் 93.38 சதவீதம் பேரும். காரைக்காலில் 87.03 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்