சென்னை: சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் ஜி.டி. விரைவு ரயில் வரும் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி. விரைவு ரயில் வரும் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
அதன்படி, புதுடில்லியில் இருந்து நேற்று புறப்பட்ட ஜி.டி. விரைவு ரயில் சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும். வரும் 9-ல் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு எழும்பூர், ஆந்திர மாநிலம் கூடூர் வழியாக புதுடெல்லிக்கு செல்லும். அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மாற்றம் அமலில் இருக்கும்.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago