நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி சென்னையைச் சேர்ந்த 2பேர் உயிரிழந்தனர்.
தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூரில் கடற்கரைக்கு செல்ல நேற்று மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து 16 பேர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனைக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள் கடற்கரையில் நின்றிருந்த போது, ராட்சத அலை எழுந்துள்ளது.
இதில் சென்னை வில்லிவாக்கம் ஜெயசீலன் மகன் மனோஜ் குமார் ( 25 ), சென்னை சூளைமேடு விசூஸ் ( 54 ) ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள விழுந்தைம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமதாஸ் ( 42 ). கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஆதிஷா ( 7 ). நேற்று பிற்பகல் 2 மணியளவில் தந்தையும், மகளும் தேங்காய்பட்டணம் மீன் பிடி துறைமுக பகுதிக்கு வந்துள்ளனர்.
கடற்கரையில் நின்றிருந்த போது, வேகமாக வந்த அலையில் சிக்கி, இருவரும் கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த மக்கள் உடனடியாக பிரேமதாஸை மீட்டனர். ஆனால், சிறுமி ஆதிஷா கடலில் மாயமானார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago