திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் உதவி மண்டல அலுவலரைத் தாக்கியதாக, கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்புவனம் அருகே மாங்குடியில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் இரவு10 மணிக்கு அந்த வாக்குச்சாவடியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்ல மண்டல அலுவலர் குழு சென்றது. அந்தக் குழுவில், உதவி மண்டல அலுவலராக கொந்தகை வருவாய் ஆய்வாளர் முத்துமுருகன் இடம் பெற்றிருந்தார்.
அப்போது முத்துமுருகன் மீதான முன்விரோதத்தில், மாங்குடி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அன்புச்செல்வன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 15 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. திருப்புவனம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஒன்றரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதனால், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட மற்ற வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
» தமிழகத்தில் 7, 8-ம் தேதிகளில் கனமழை வாய்ப்பு
» பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி: அஞ்சல் துறை நடத்துகிறது
இதைத் தொடர்ந்து, உதவி மண்டல அலுவலர் முத்துமுருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செல்வன் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில், சிவகங்கை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார். அதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதிபெறாமல் அன்புச்செல்வன் திருப்புவனம் வட்டத்தை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கமாநிலச் செயலாளர் தமிழரசன் கூறுகையில், `மண்டல உதவி தேர்தல் அலுவலர் மீது தாக்குதல் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் மீதுமாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம்.
மேலும், அவருடன் சேர்ந்து தாக்கியதோடு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆவணங்களை எடுத்துச் செல்வதை தாமதப்படுத்திய 15 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago