புதுவை மத்திய பல்கலை.யில் சோமாயணம் நாடகம்: இயக்குநராக செயல்பட்டவர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் அரங்கேறிய சோமாயணம் நாடக விவகாரம் தொடர்பாக அதன் இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து நாடகத்துறையை மூடி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நிகழ்கலைத்துறை சார்பில், நாடக தினத்தை முன்னிட்டு மார்ச் மாத இறுதியில் ‘எழினி 2கே24’ நிகழ்வு நடைபெற்றது. அதில், ‘சோமாயணம்’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தில் ராமாயண கதாபாத்திரங்களை அவமதிக்கும் வகையில் கதையும், கதாபாத்தி ரங்களும் சித்தரிக்கப்பட்டதாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ( ஏபிவிபி ) போராட்டம் நடத்தியது.

அப்போது, இதில் சம்பந்தப் பட்டவர், நடிகர்கள், நாடகத்தை அனுமதித்த துறைத் தலைவர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து பல்கலைக் கழகமும் விசாரணையைத் தொடங் கியது. இந்நிலையில் நாடகத்துறைத் தலைவர் வேலு சரவணன் பதவி யிறக்கம் செய்யப்பட்டார். டீன் தரனுக்கு நாடகத் துறைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடகத்தின் இயக்குநரும், பட்டமேற்படிப்பு முதலாண்டு மாணவருமான புஷ்பராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருக்கு பல்கலைக் கழகத்தரப்பில் தெளிவான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக நாடகத்துறை மாணவர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்டோரை சந்திக்க முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து நாடகத்துறை மாண வர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அப்போது போலீஸார் அவர்களை போராட அனு மதிக்காமல் தடுத்ததால், சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர்.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், ‘‘தகுதியில்லா தவர்கள் துறைத் தலைவராக நீடிக்கக் கூடாது. நாடகத்தை இயக்கிய மாண வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக விசாரித்து அவர் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும். விவரம் தெரியாமல் நாடகத்தில் நடித்த மாணவிகளுக்கு தவறான எஸ்எம்எஸ் வடஇந்திய மாநிலங்களில் இருந்து வருகின்றன. இதுபற்றி பல்கலைக்கழக தரப்பில் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. இதனால் பாதுகாப்பு தரக்கோரியும், நாடகத்துறை மாணவர்கள் அழைத்து பல்கலைக்கழகத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்