நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களுக்கு இலவசமாக தண்ணீர் விநியோகிக்கும் வகையில் தண்ணீர்பந்தல் திறப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் முன்மொழிவுகள் அனுப்பின. அதன் அடிப்படையில், இந்தியதேர்தல் ஆணையம், தேர்தல்நடத்தை விதிகளின் அடிப்படையில் இந்த முன்மொழிவுகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது.

எனவே, எந்த ஓர் அரசியல் கட்சியும், வேட்பாளரும் இந்த செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பானஅரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம்.

அனைத்து மாவட்ட தேர்தல்அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தைவிதிகளை பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE