விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது?- இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூன் 1-ல் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்தவாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி, உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஏப்ரல் 4ம் தேதி அவர் வீடு திரும்பினார். ஏப்ரல் 5ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே வி சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புகழேந்தியும் கலந்துகொண்டார். வரவேற்புரையாற்ற காத்திருந்த அவர், திடீரென மயங்கி விழ, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி ஏப்ரல் 6ம் தேதி காலமானார். எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி அறிவிக்கப்பட்டால் ஜூன் 1ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மே மாதம் 7ம் தேதி தொடங்கி, 14ம் தேதி நிறைவைடைய வேண்டும்.

இது குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட தகுதியானவர்களின் பட்டியல் ஏற்கனவே தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடைசிகட்ட தேர்தலில் இத்தேர்தலை நடத்திட திமுக தலைமை விரும்பியதால்தான் புகழேந்தி இறந்த சில நாட்களிலேயே தேர்தல் ஆணையத்திற்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.

இன்று (30ம் தேதி) விழுப்புரம் நகருக்குப் பின் விக்கிரவாண்டி தொகுதிகுட்டப்பட்ட பகுதிகளில் அமைச்சர் பொன்முடி தண்ணீர் பந்தல்களைத் திறந்து தேர்தல் பிரச்சாரத்தை மறைமுகமாக துவக்கிவிட்டார் என்றே சொல்லலாம். 7ம் கட்ட தேர்தலோடு விக்கிரவாண்டி இடைதேர்தலும் நடைபெற அதிக வாய்ப்புள்ளது” என்றனர்.

இதனை உறுதிபடுத்தும்வகையில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் நேற்று முன் தினம் (28ம் தேதி) இடைதேர்தலில் யாருக்கு வாய்ப்பு அளித்தால் எளிதில் வெற்றிபெறலாம் என ஆலோசிக்கப்பட்டது. அப்போது தொகுதியில் சாதிவாரியாக வாக்காளர்கள் விவரம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடைதேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையை தற்போது மாற்றிக்கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணியில் போட்டியிட உள்ளதால், இத்தேர்தலை ஒத்திகை தேர்தலாக பார்க்க வாய்ப்புள்ளது. இதே தொகுதியைச் சேர்ந்தவர்தான் வேட்பாளர் என்றும் தெரிவிக்கின்றனர். ஒருவேளை பாமக இத்தொகுதியில் போட்டியிடாவிட்டால் பாஜக போட்டியிடும் என்றும் தெரிய வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் விக்கிரவாண்டி மொத்தமுள்ள 2,34,173 வாக்காளர்களில் 1,82,721 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் 78.03. ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்