வட தமிழகத்தில் மே 3-ம் தேதி வரை 9 டிகிரி வெப்பநிலை உயரும்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வட தமிழக உள் மாவட்டங்களின் இன்றும், நாளையும் சமவெளிப் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், மே 2, 3-ம் தேதிகளில் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் அதிகரிக்கக்கூடும்.

மே 2, 3-ம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்துக்கு இன்று முதல் மே 3-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE