தமிழகத்தில் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும்: காங்கிரஸாருக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. கடந்த இரு வாரங்களாக 14 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வருகிறது. இச்சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் அமைக்கப்பட உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க முகப்பிலும், சத்தியமூர்த்தி பவன் முகப்பிலும் மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் மே 1 முதல் 31-ம் தேதி வரை அமைக்கப்பட உள்ளது. இவ்விரு இடங்களிலும் மே 1-ம் தேதி நீர்மோர் பந்தல்களை தொடக்கி வைக்க இருக்கிறேன்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு இதை நடத்த விரும்புகிறோம். தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தங்களது பகுதிகளில் பரவலாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் தாகத்தை தீர்க்கும் சேவையில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிப்பதை நோக்கமாக கொண்டு இந்த பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்