புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஆண்டு தோறும் புதுச்சேரி அரசின் மின்துறை சார்பில் நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டண நிர்ணயத்துக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வது வழக்கம்.
நடப்பாண்டுக்கான மின்கட்டண உயர்வு, வருவாய் தொடர்பாக கடந்த நவம்பர் 29-ல் மின்துறை தனது அறிக்கையை அளித்தது. இதையடுத்து 2018-19 ஆம் ஆண்டுக்கான மின்கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட்டுள்ளது. இக்கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்துறை இணையதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு விவரம்:
வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் 100 யூனிட் வரை ரூ. 1.10ல் இருந்து ரூ. 1.30 ஆக உயர்கிறது.
100 யூனிட் முதல் 200 யூனிட் வரை ரூ. 1.75ல் இருந்து ரூ. 2.25 ஆகிறது. 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை ரூ. 3.50ல் இருந்த ஒரு யூனிட் கட்டணம் ரூ. 3.95 ஆக உயர்கிறது. 300 யூனிட்டுக்கு மேல் ரூ. 4.60 ஆக இருந்த கட்டணம் ரூ. 5.10 ஆக அதிகரிக்கிறது. வர்த்தக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் 100 யூனிட் வரை ரூ. 4.90ல் இருந்து 5.15 ஆகிறது.
101 யூனிட் முதல் 250 யூனிட் வரை ரூ. 5.60ல் இருந்து ரூ. 6.15 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் ரூ. 6.25 ல் இருந்து ரூ. 6.85 ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து மின் உபயோகிப்பாளர்களிடம் இருந்து மாத நிலைக்கட்டணம் மற்றும் மின் உபயோக கட்டணத்தின் மீது 4 சதவீத சார்ஸ் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago