பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலங்கானாவில் தமிழிசை 10 நாள் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று சென்னையிலிருந்து ரயில் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் தமிழிசை சவுந்தரராஜன். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி 3-வது முறையாக இந்திய பிரதமராக வரவேண்டும். அதற்கு தெலங்கானாவின் பங்கு மிகவும் முக்கியமானது. அதனால் தெலங்கானாவில் 10 நாட்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள செல்கிறேன். விபி.சிங் முதல் மன்மோகன் சிங் வரை மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆளும்போது கொடுத்த திட்டங்களைவிட அதிகமான திட்டங்களை தமிழகத்துக்கு பிரதமர் மோடி வழங்கியிருக்கிறார்.

பாஜகவால் மட்டும்தான் ஒரு வலிமையான பிரதமரை கொடுக்க முடியும். இதனால் வேண்டுமென்றே பிரதமர் மோடி வெறுப்பு அரசியல் செய்வதாக பரப்பி வருகின்றனர். சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கு இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு பிரதமர் மோடி பாடுபட்டிருக்கிறார். போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தற்போது சிறை உள்ளே இருந்தாலும்கூட, அவர் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை தமிழகத்தில் சாதித்து விட்டார்.

எனவே தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை முதல்வர் ஸ்டாலின் முதலில் சரிசெய்யட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்