சென்னை: கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்குவது மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடம் முக்கியமான வழித் தடத்தில் ஒன்றாக உள்ளது. இந்த வழித் தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை ஒட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்கள் எப்போதும் கூட்டம் அலை மோதும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு வரை, இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.
இதற்கிடையில், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.2 கி.மீதொலைவுக்கு 4-வது பாதைஅமைக்கும் பணி காரணமாக, கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரையிலான ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சிந்தாதிரிப் பேட்டை - வேளச்சேரி இடையேமட்டும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பயணிகள் கடும் சிரமம்: எழும்பூர் - கடற்கரை 4-வது பாதைக்கான பணிகளை முடித்து, கடந்த மார்ச் மாதம் கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது மேலும் தாமதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
» சென்னை மாநகரில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது: அதிகாரிகள் உறுதி
» 19 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
இது குறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘சிந்தாதிரிப்பேட்டை யில் இருந்து சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்துக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் தொடர்ந்து, சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே, கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும். கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவையை விரைவில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய பாதைக்கான தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதுபோல, கோட்டை, பூங்கா ஆகிய நிலையங்களில் ஏற்கெனவே இருந்த நடைமேம்பால ரயில் பாதைகள் அகற்றப்பட்டு, கூடுதல் நடைமேடைகள் அமைப்பது, மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் நடை பெற்று வருகின்றன.
மேலும், கூவம் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பூமிக்கடியில் கம்பிகள் வாயிலாக அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்ட மாக, ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும். அனைத்து பணிகளையும் ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன் பிறகு, கடற்கரை - வேளச் சேரிக்கு மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago