தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், பழங்குடியினர் சொந்தமாக தொழில் தொடங்க ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட, பழங் குடியின ஆண்கள், பெண்கள் சுயமாக தொழில் தொடங்க இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடனாக வழங்கப்படும்.
மிகக் குறைந்த வட்டியில் இந்த கடன் தொகை வழங்கப்படு கிறது. கடன் பெற்ற 7 ஆண்டு களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் பெறுபவர்கள் மொத்த கடன் தொகையில் 10 சதவீத தொகையை முன்பண மாக கட்ட வேண்டும். தகுதிவாய்ந்த தொழில்முனைவோரை தேர்வு செய்வது வங்கிகளுக்கு பெரும் சிரமமாக இருப்பதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாட்கோ, மாவட்ட தொழில் மையம் (டிக்) செயல்படுத்தி வரும் திட்டங்களின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தொழில்முனைவோருக்கு `ஸ்டா ண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குமாறு வங்கிகளுக்கு மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) மேம்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து எம்எஸ்எம்இ மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தொழில் துறை ஆலோசகர் எஸ்.சிவஞானம் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
மத்திய அரசின் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை 943 பேருக்கு மட்டுமே கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வெறும் 4.3 சதவீதம். எனவே, தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு இந்த கடனுதவி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
மாவட்ட தொழில் மையங்களில் 2015-17-ல், பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்இஜிபி), வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யுஒய்இஜிபி), நீட்ஸ் திட்டத்தின் கீழ் 33,759 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
தாட்கோ நிறுவனத்தின் தொழில்முனைவோர் வளர்ச்சி திட்டம் (இடிபி), இளைஞர் களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் (எஸ்இபிஒய்) 6,952 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடன் வழங்க வங்கிக ளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்க போதிய நிதி இல்லாததால், அந்த விண்ணப்பங்களுக்கு `ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தில் கடன் வழங்க வேண் டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளோம்.
இதைப் பரிசீலித்து செயல் படுத்துவதாக வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago