புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

By கி.ஜெயப்பிரகாஷ்

தரமணியில் இருந்து சிறுசேரிக்கு பறக்கும் சாலை அமைக்க ரூ. 2,600 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனமான ஜய்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவ தாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். குறிப்பாக, சென்னைக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. மேலும், பல்வேறு அலுவலகப் பணியின் காரணமாக சென்னைக்கு அன்றாடம் வந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் முக்கிய அங்க மாக இருக்கும் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக் குள் நாள் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே, இந்த சாலை கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக புதிய தொழில்நுட்பம் மூலம் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்து, தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தரமணியில் இருந்து சிறுசேரி வரையில் 17 கிமீ தூரத்துக்கு பறக்கும் சாலையை அமைக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது.

1.40 லட்சம் வாகனங்கள்

இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ``சென்னையை இணைக்கும் சாலைகளில் பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆர்) முக்கியமான தாக இருக்கிறது. இந்தச் சாலையில் தற்போது தினமும் சுமார் 1.40 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. எனவே, இந்தத் தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தரமணி - சிறுசேரி வரையில் 17.7 கிமீ தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

பூமியில் இருந்து சுமார் 5.5 மீட்டர் உயரத்தில் இந்த பறக்கும் சாலை அமைக்கப்படவுள்ளது. இருபுறமும் தலா 2 வழிகள் என மொத்தம் 4 வழிகள் இருக்கும். இதற்கான முழு திட்ட அறிக்கை யைத் தயாரித்துள்ளோம். தற்போதைய திட்ட மதிப்பு ரூ.2,600 கோடியாகும். இத்திட்டத்தை செயல்படுத்த கடன்வசதி பெற, தமிழக அரசு மூலம் ஜப்பான் நாட்டின் அரசு நிதி நிறுவனமான ஜய்காவுடன் (JICA) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரு கிறது.

கடன்தொகை கிடைத்தவுடன் இத்திட்டம் தொடங்கப்படும். இத்திட்டம் தொடங்கிய அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். பொதுமக்கள் வசதியாகவும், விரைவாகவும் செல்ல முடியும்.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயண நேரம் குறையும்

இதுதொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் கீத கிருஷ்ணன் கூறும்போது, ‘‘பழைய மகாபலிபுரம் சாலை யில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், சில நேரங்களில் சாலை விபத்துகளும் நடக்கின்றன. எனவே, வாய்ப்புள்ள இடங்களில் இதுபோன்ற பறக்கும் சாலைகளை அமைத்தால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். பயணிகள் வசதியாகச் செல்வதுடன், பயண நேரத்தையும் குறைக்க முடியும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்