முதல்வர் மாலத்தீவு செல்வதாக வெளியான தகவல் தவறு: திமுக

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் தவறானது என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல், ஏப்.16-ம் தேதி வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன்பின், கடந்த சில தினங்களாக திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, கள நிலவரம் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில், அவர்வரும் ஏப்.29 முதல் மே 7-ம் தேதி வரை மாலத்தீவுக்கு ஓய்வெடுக்கச்செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், இது தவறான தகவல் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்