சென்னை: பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் குறித்து பயணிகள் உடனடியாக புகாரளிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 2800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.
பேருந்து பயணிகளை நிறுத்தங்களில் முறையாக ஏற்றி, இறக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. எனினும், அவ்வப்போது நிறுத்தத்தில் பயணிகள் இருந்தபோதும் பேருந்துகளை நிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
பேருந்துகள் நிற்காமல் செல்லும்போது, உடனடியாக 149 எனும் புகார் எண்ணில் பயணிகள் புகாரளிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
» வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகமானது: தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், “அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால், பேருந்து வழித்தட எண், பதிவு எண், பேருந்து எங்கிருந்து எங்கு சென்றது, நேரம், எந்த நிறுத்தத்தில் நிற்கவில்லை என்ற விவரத்தை 149 என்ற எண்ணில் பயணிகள் உடனடியாக புகாரளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago