காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் விமான நிலையம் முற்றுகை: தினகரன், அய்யாக்கண்ணு, பிஆர்.பாண்டியன் உட்பட 1,623 பேர் கைது

By ஜெ.ஞானசேகர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் திருச்சியில் நேற்று நடத் திய விமான நிலைய முற்றுகை போராட்டத்தின்போது 1,623 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு, விமான இயக்கத்தை தடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்திலும் பங்கேற்பதாக அறிவித்தது.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போலீஸாரும், விமான நிலைய வளாகத்துக்குள் 200-க்கும் அதிகமான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின ரும் குவிக்கப்பட்டிருந்தனர். சாலையில் ஏராளமான இடங்க ளில் இரும்புத் தடுப்புகளையும் அமைத்திருந்தனர்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையம் அமைந்துள்ள திருச்சி- புதுக்கோட்டை சாலையில் நேற்று காலை 9 மணியளவில் 2,000-க்கும் அதிகமானோர் விமான நிலையம் முன்பு சாலை யில் திரண்டிருந்தனர். பின்னர், வேனில் தினகரன் வந்தார். அவர் வாகனத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணுவும் ஏறிக்கொண்டார்.

விவசாயிகளுக்கு ஆதரவு

அப்போது பேசிய தினகரன், ‘காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடி யாக அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. விவசாய சங்கங்கள் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் அமமுக பங் கேற்கும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்ததுபோல மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி போன்ற திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம். தேனியில் நியூட்ரினோ திட்டத்தையும் எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். அதேபோல, தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலையை எதிர்த்து கண் டன பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம். பொதுக் கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்ற உத்தரவைப் பெற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும்’ என்றார்.

முன்னதாக பி.அய்யாக்கண்ணு பேசும்போது, ‘தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டுக்கு காவிரி வாரியம் அமைத்துக் கொடுக்குமாறு நீதித் துறை உத்தரவிட்டும், பொதுமக்களின், விவசாயிகளின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டுதான் நீதிமன் றத் தீர்ப்புக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை” என்றார்.

தடுப்புகள் கவிழ்ப்பு

தொடர்ந்து, விமான நிலைய புதிய முனைய வாயில் நோக்கி அனைவரும் சென்றனர். அப்போது, தடுப்புகளை சாலையில் கவிழ்த்துவிட்டு விமான நிலையத்துக்குள் நுழைவதற்காக கட்சியினரும், விவசாயிகளும் முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு நேரிட்டது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. அப்போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக வந்த பிஆர்.பாண்டி யன் மத்திய அரசைக் கண்டித் தார்.

போலீஸ் வாகனம் இல்லை

அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். 4,000-க் கும் அதிகமானோரை கைது செய்ய போலீஸாரிடம் வாகனம் இல்லை. அனைவரும் கலைந்து செல்ல போலீஸார் அறிவுறுத்தினர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து தினகரன், அய்யாக்கண்ணு, பிஆர்.பாண்டியன் உட்பட 1,623 பேரை கைது செய்தனர். போதிய வாகனம் இல்லாததால் கைது செய்யப்பட்டவர்கள், மண்டபங்களுக்கு நடந்தே சென்றனர்.

தினகரன் கைது செய்யப்பட்டு ஏற்றப்பட்ட போலீஸ் வாகனத்தை தடுத்த அமமுகவினர், அந்த வாகனத்தின் மீது ஏறினர். இதனால், போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

முடங்கிய போக்குவரத்து

போராட்டத்தால் திருச்சி - புதுக்கோட்டை சாலை யில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. குறிப்பாக, கொட்டப்பட்டு அகதி கள் முகாம் முதல் விமான நிலை யம் வரை வேறு வாகனங் கள் எதுவும் செல்லவில்லை. போராட்டத்தால், திருச்சிக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் வேறு வழிகளில் திருப்பிவிடப்பட் டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்