மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க கோவை, திருப்பூரில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு விடுப்பு

By செய்திப்பிரிவு

கோவை / திருப்பூர்: மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் சரவணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தல் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நாளையும் ( ஏப்.26 ), ஆந்திராவில் மே 13-ம் தேதியும், கர்நாடக மாநிலத்தில் 2-ம் கட்டமாக மே 7-ம் தேதியும் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக் கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தேர்தல் நாளில், தம் சொந்த மாநிலத்துக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135 (பி)-ன் படி சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

மேற்படி தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை சார்பில் மாநில அளவிலும் மற்றும் திருப்பூர் மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கார்த்திகேயன் 94442 21011 மற்றும் திருப்பூர் மாவட்ட அளவில் உள்ள கட்டுப்பாட்டு அறை அலுவலர்களான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் புகழேந்தி 94864 68655, சரவணன் 80564 84464, துணை இயக்குநர் சந்தோஷ் 99942 26843 ஆகிய அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.

கோவை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநர் ர.ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘‘கோவை மாவட்ட அளவில் உள்ள கட்டுப்பாட்டு அறை அலுவலர்களான இணை இயக்குநர் ர.ரமேஷ் - 0422-2990069, துணை இயக்குநர் ம.கலைமதி 9629195525, துணை இயக்குநர் கே.துரை ராஜ் 9894109673, நீலகிரி மாவட்ட அளவில் உள்ள கட்டுப் பாட்டு அலுவலர்களான இணை இயக்குநர் மோ.சீனிவாசகம் 0422-2645587, துணை இயக்குநர் இ.கீர்த்திவேல் ராஜேஷ் 9600908630, உதவி இயக்குநர் பி.சரத்குமார் 9894870412 ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களின் புகார்களை அளிக்கலாம்’’எனக் கூறப்பட்டுள்ளது.

புகார் அளிக்க தொழிலாளர் துறை அழைப்பு: கோவை தொழிலாளர் உதவி ஆணையர் ( அமலாக்கம் ), தொழிலாளர் துறை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர் சு.காயத்திரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து வாகனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக் கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு தர வேண்டும்.

விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை உறுதி செய்ய, தொழிலாளர் துறையால் மாவட்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட பொறுப்பு அலுவலரான தொழிலாளர் உதவி ஆணையர் சு.காயத்திரி 9445398752, 0422-2241136, உறுப்பினர்களான தொழிலாளர் துணை ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் 9942664066, முத்திரை ஆய்வாளர் 9942437022 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் அ.ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ், மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயக்குமார் - 9578777757, தொழிலாளர் துணை ஆய்வாளர் வி.லட்சுமி காந்தன் - 9003312844, தொழிலாளர் உதவி ஆய்வாளர் இரா.பேச்சிமுத்து 9944258037 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்