விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருவாரூர் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயிலும் விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு இயங்கும். மே 2-ம் தேதி முதல் இவைகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு. ரயில் பயணிகள் நலன் கருதி சில ரயில்களின் சேவையை நீட்டித்து அனுமதி வழங்கி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த ரயில்களின் நீட்டிப்பு மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அமலுக்கு வரும். இதனடிப்படையில், விழுப்புரத் தில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண்.06877 ), மே 2 முதல் திருவாரூர் வரை இயக்கப்படும்.

இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.25 மணிக்குப் புறப்பட்டு, திருவாரூரை இரவு 10.45 மணிக்கு சென்றடையும். இதுபோல, மே 3-ம் தேதி முதல் திருவாரூரில் இருந்து தினமும் காலை 5.10 மணிக்குப் புறப்படும் திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் ( வ.எண்.06690 ) விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண்.06033 ), மே 2-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை கடற்கரை யில் மாலை 6 மணிக்குப் புறப் படும் இந்த ரயில் வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு இரவு 9.35மணிக்கு வந்து, திருவண்ணா மலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்து சேரும்.

இதுபோல, மே 3-ம் தேதி முதல் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் ( வ.எண்.06034 ) காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். இந்த ரயில்கள் பெண்ணாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதராம்பட்டு, ஆரணிசாலை, மடி மங்கலம், போளூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சியில் இருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண்.06892 ) மே 2-ம் தேதி முதல் விழுப்புரம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் விருத்தாச லத்துக்கு இரவு 9 மணிக்கும், விழுப்புரத்துக்கு இரவு 10.30 மணிக்கும் வந்து சேரும்.

இதுபோன்று விழுப்புரம் - திருச்சி சந்திப்பு பயணிகள் ரயில் ( வ.எண். 06891 ) மே 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் இருந்துகாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலத்துக்கு காலை 5.55 மணிக்கும், திருச்சி ரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில்கள் உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய் நல்லூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண். 06122 ) மே 2-ம் தேதி முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் விருத்தாசலத்துக்கு இரவு 9 மணிக்கு வந்து சேரும்.

தொடர்ந்து உத்தங்கல்மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தை இரவு 10.25 மணிக்கு சென்றடையும். கடலூர் துறைமுகத்தில் இருந்து சேலம் சந்திப்பு ரயில் நிலையம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் ( வ.எண்.06121 ), மே 3-ம் தேதி முதல் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலத்துக்கு காலை 6.05 மணிக்கு வந்தடையும்.

தொடர்ந்து இந்த ரயில் புறப் பட்டு சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தை காலை 9.05 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. திருச்சியில் மாலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் விழுப்புரத்துக்கு இரவு 10.30 மணிக்கு வந்து சேரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்