சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமான பயணிகளுக்கு வாகன நிறுத்துமிட வசதி வழங்கும் வகையில், பயணிகள் அல்லாதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் விமானநிலையம் முதல் விம்கோநகர் வரை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை இரண்டாவது வழித்தடத்திலும் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் மொத்தம் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் அவற்றின் அளவைப் பொருத்து வாகன நிறுத்துமிட (பார்க்கிங் வசதிகள்) வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வசதியை வழக்கமாக மெட்ரோரயில்களில் பயணிக்கும் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
பயணிகள் தங்கள் வீடுகளில் இருந்து டூவீலர்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து அங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். தற்போது, மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில்நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில் போதுமானவசதி இல்லை.
» கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க அறிவுறுத்தல்
» மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை: இன்று அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
எனவே, வழக்கமான பயணிகளுக்கு பார்க்கிங் இடத்தை வழங்கும் விதமாக, பயணிகள் அல்லாதவர்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பல மெட்ரோ ரயில் நிலையங்களின் பார்க்கிங் பகுதிகளில் பயணிகள் தவிர, பயணிகள் அல்லாதவர்களும் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதற்கு முக்கியக்காரணம் வாகன பாதுகாப்பு மற்றும் குறைவான பார்க்கிங் கட்டணம் ஆகும்.
இவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தின் பார்க்கிங் இடத்தில் விட்டுவிடுவதால், வழக்கமான பயணிகளுக்கு பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பது இல்லை.
குறிப்பாக, சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், அண்ணாநகர் கோபுரம், திருமங்கலம், நங்கநல்லூர் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் அலுவலக நேரங்களில் ( பீக் ஹவர்ஸில்), வழக்கமான பயணிகளுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடமின்றி நிரம்பி வழிகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக,பயணிக்காதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறோம். அவர்கள் சுதந்திரமாக வாகனங்களை நிறுத்த வேண்டும்.
எனவே, பயணிக்காதவர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை சில வாரங்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு நிலையத்திலும் பார்க்கிங் கட்டண உயர்வு என்பது பயணிகளின் தேவை மற்றும் ரயில் நிலையத்தின் பயணிகள் வரத்து ஆகியவற்றைப் பொருத்து இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago